தமிழ்நாடு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

4th Mar 2021 11:03 AM

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம், வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனைத் தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன். பெருமாள் எழுந்தருளும் வெளிபிரகாரத் தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறும்.

நிகழாண்டிற்கான தொடங்க விழா , வியாழக்கிழமை காலை, த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில்,பெருமாள் சந்நதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில் ,கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியப்பட்டி பட்டாட்ச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர்.

ADVERTISEMENT

பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ராஜகோபாலசுவாமி.

இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார், அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.6 ஆம் தேதி ராஜஅலங்கார சேவை, 9.கண்டபேரண்ட பக்ஷி, 13. தங்க சூர்யபிரபை, 18. கோரதம், 19. வெண்ணைத்தாழி,வெட்டுங்குதிரை, 20ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2 ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர் ஆர்.ஹரிஹரன்,நிர்வாக அலுவலர் இரா.சங்கீதா, மண்டகப்படிதாரர்கள்,விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
 

Tags : Mannargudi Rajagopala Swamy Temple Panguni Festival
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT