தமிழ்நாடு

திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை

4th Mar 2021 10:41 AM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

இதனையொட்டி கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விசிகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Tags : தேர்தல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT