தமிழ்நாடு

மடிப்பாக்கத்தில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்

4th Mar 2021 04:01 PM

ADVERTISEMENT

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் இன்று இரவு மடிப்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். 
சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடன்  தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. 
இதுபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியும் சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அந்த கட்சியின் தலைவா் கமல்ஹாசன் மடிப்பாக்கத்தில் இன்று இரவு 7 மணிக்கு தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 
முன்னதாக அவர் நேற்று ஆலந்தூரில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் இன்று மடிப்பாக்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : KAMALHAASAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT