தமிழ்நாடு

மதுரை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

4th Mar 2021 03:55 PM

ADVERTISEMENT

 

மதுரை கோட்டத்தில் ஏழு முக்கிய ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. 

ரயில் இயக்கம், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு, ரயில் நிலைய சுத்தம் சுகாதாரம், பயணிகள் பயணச் சீட்டு வழங்கும் முறை, ரயில் நிலைய மேம்பட்ட பயணிகள் வசதிகள் மற்றும் ரயில்வே பார்சல் கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ரயில் நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்குவது வழக்கம். 

தற்போது சிறப்பாகச் செயல்பட்ட திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் 14001:2015 வழங்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT