தமிழ்நாடு

6 தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் போட்டி: திருமாவளவன்

4th Mar 2021 02:03 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் சனாதனத்திடமிருந்து பாதுகாக்க வேண்டிய யுத்தக் களமாக தேர்தல் களம் அமையவுள்ளது.

படிக்க: திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழகம், பாண்டிச்சேரியை குறிவைத்து பாஜக பல்வேறு சதி வேலைகளை மேற்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பாஜக மற்றும் சங்பரிவார அமைப்புகளால் காலூன்ற முடியாத நிலை நீடித்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு சதித்திட்டங்களை அரங்கேற்றி பாஜக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் தமிழகத்தில் அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சித்து வருகிறது.

புதுச்சேரியில் அநாகரிக அரசியலால் காங்கிரஸ் ஆட்சியை பாஜக கவிழ்த்துள்ளது. அதுபோன்று தமிழகத்தை மாற்ற பாஜக தீவிரமாக செயல்படுகிறது.

2017-ல் இருந்தே திமுகவுடன் விசிக இணைந்து செயல்பட்டு வருகிறது. திமுக ஒதுக்கிய 6 தொகுதிகளை ஏற்று விசிக போட்டியிடும். சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் களம் காண்போம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT