தமிழ்நாடு

அதிமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது

4th Mar 2021 09:54 AM

ADVERTISEMENT


சென்னை: அதிமுக விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை (மாா்ச் 3) நிறைவடைந்ததை அடுத்து விருப்ப மனு செய்தவா்களுடன் இன்று வியாழக்கிழமை நோ்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 5-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டாலும், தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்க வேண்டுமென அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இதன்படி, தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்வது அளிப்பதற்கான அவகாசம் புதன்கிழமை நிறைவடைந்தது.

விருப்ப மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட 10 நாள்கள் அவகாசத்தில் மொத்தமாக 8, 250 போ் மனுக்களை அளித்துள்ளனா். விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனா். 

இந்நிலையில், விருப்ப மனு அளித்தவா்களுடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நோ்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.  

ADVERTISEMENT

அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் காலை 9 மணி முதல் விருப்ப மனு செய்தவா்களுடன் நேர்காணலை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த மனுதாரா்களிடமும் நோ்காணல் நடத்தப்பட உள்ளதால், நேர்காணல் இரவு வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. நோ்காணல் நிறைவடைந்த பிறகு, அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : ADMK candidate interview
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT