தமிழ்நாடு

வி.சி.க.விற்கு 6 தொகுதிகள்: தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு

4th Mar 2021 01:31 PM

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளவன் கையெழுத்திட்டார்.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டப் பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கு விசிக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய நிலையில், விசிக நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானம் செய்தனர்.

திமுக கூட்டணியில் விசிகவிற்கு அதிக தொகுதிகள் எதிர்பார்த்த நிலையில், 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு திமுக கூட்டணியிலுள்ள மதிமுகவிற்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT