தமிழ்நாடு

உறவுக்கார பெண்ணை காதலித்ததால் ஊத்தங்கரை அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது

4th Mar 2021 01:36 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: உறவுக்கார பெண்ணை காதலித்ததால் ஊத்தங்கரை அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பாவக்கால் பிரிவு சாலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் மேல் அச்சமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திலிப்குமார்(25) என்கிற வாலிபர் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். 

இந்த கொலை  சம்பந்தமாக ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில். பெரியதள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (21). அவரது நண்பர்களான அரூர் அடுத்த சின்னா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (17). மணிகண்டன்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. 

அந்த மூன்று நபர்களையும் ஊத்தங்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

ADVERTISEMENT

கொலை வழக்கு சம்பந்தமாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது: செல்வகுமாரும் இறந்துபோன திலீப் குமாரும் திருப்புத்தூரில் உள்ள தனியார் தொழில் கல்லூரியில் படித்து வந்ததாகவும்,  இருவரும் நண்பராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வகுமாரின் உறவுக்காரப் பெண்ணை திலிப்குமார் காதலித்ததாகவும் இது செல்வகுமாருக்கு எரிச்சல் ஏற்படுத்தியதாகும்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து, செல் போன் வாங்கி தருவதாக கூறி அனுமன் தீர்த்த பகுதிக்கு வரவழைத்து அங்கே கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Tags : murder 3 arrested
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT