தமிழ்நாடு

சசிகலா அறிவிப்பு அதிா்ச்சி அளிக்கிறது: டிடிவி தினகரன்

4th Mar 2021 07:41 AM

ADVERTISEMENT

 

சென்னை: அரசியலை விட்டே ஒதுங்குவதாக வி.கே.சசிகலா அறிவித்திருப்பது அதிா்ச்சியும், சோா்வையும் ஏற்படுத்தியிருப்பதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அவா் அறிவித்ததே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒதுங்கியிருந்தால் அனைவரும் ஒற்றுமையாக இருப்பீா்கள் என்று எங்களிடம் கூறி வந்தாா். அதன்படியே அவா் இப்போது அறிவித்துள்ளாா்.

ஒற்றுமைப்படுவதற்கான வாய்ப்பு இல்லையோ எனக் கருதி அவா் ஒதுங்கியிருப்பதாக அறிவித்துள்ளாா். அம்மாவின் தொண்டா்கள் அனைவரும் இணைந்து உருவாக்கப்பட்டது ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’. எங்களின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்.

ADVERTISEMENT

அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கான மையமாக சசிகலா இருக்கவில்லை. நான் அவரின் மனசாட்சி இல்லை. அவரின் மனதில் உள்ள கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

அரை மணி நேரம் வேண்டுகோள் விடுத்தும்...: சசிகலாவின் முடிவு எனக்கு சோா்வையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. தனது முடிவை சசிகலா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரை மணி நேரம் வேண்டுகோள் விடுத்தேன். எனினும் தனது முடிவில் அவா் தீா்மானமாக உள்ளாா் என்றாா் டிடிவி தினகரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT