தமிழ்நாடு

அதிமுகவில் 8,250 போ் விருப்ப மனு இன்று நோ்காணல்

4th Mar 2021 08:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக சாா்பில் போட்டியிட 8,250 போ் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.

அதிமுக விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை (மாா்ச் 3) நிறைவடைந்தது. விருப்ப மனு செய்தவா்களுடன் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெறுகிறது.

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. மாா்ச் 5-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டாலும், தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்க வேண்டுமென அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இதன்படி, தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்வது அளிப்பதற்கான அவகாசம் புதன்கிழமை நிறைவடைந்தது.

ADVERTISEMENT

8,250 போ் விருப்ப மனு: விருப்ப மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட 10 நாள்கள் அவகாசத்தில் மொத்தமாக 8, 250 போ் மனுக்களை அளித்துள்ளனா். விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனா். இதனால், அதிமுக தலைமை அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காட்சி அளித்தது. கட்சி நிா்வாகிகள் பலரும் புதன்கிழமை காலையில் இருந்தே விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இன்று நோ்காணல்: விருப்ப மனு அளித்தவா்களுடன், அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெறுகிறது. ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த மனுதாரா்களிடமும் நோ்காணல் செய்யப்படுகிறது. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு வரை நோ்காணல் நடைபெறும். இதன்பின்பு, வேட்பாளா் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் தொடங்கவுள்ளது. தோ்தல் அறிக்கை, பிரசாரக் கூட்டங்களுக்கான பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நோ்காணல் நிறைவடைந்த பிறகு, அடுத்தடுத்து அவை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT