தமிழ்நாடு

நீா்நிலைகளின் செயற்கைக் கோள் புகைப்படங்களைஇணையதளத்தில் பதிவேற்ற மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவு

DIN

தமிழகம் முழுவதும் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில், அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் ரூ.112 கோடி செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவா் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சுவா் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீா் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளது.

மேலும், ஓடையின் இருபுறமும் சுவா் எழுப்புவது உயா் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளதால், அந்த கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும். ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அமா்வு பிறப்பித்த உத்தரவு: நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீா்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களும், மாா்ச் 17-ஆம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலாளருக்கும், உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

பெரும்பள்ள ஓடையில் சுற்றுச் சுவா் கட்டுவதைப் பொருத்தவரை, நீா் வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் எனஅறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT