தமிழ்நாடு

சட்டவிரோதமாக பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகாா்: தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு

DIN

சட்டவிரோதமாக இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில், குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்படாத இந்த ஆட்டோக்களுக்கு காப்பீடும் இல்லை. இதனால் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் பாதசாரிகள் எந்த இழப்பீடும் பெற முடியாது.

கடந்த 18 மாதங்களாக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இருந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடமை தவறி வருகின்றனா்.

இவ்வாறு சட்டவிரோதமாக இயக்கப்படும் பேட்டரி ஆட்டோக்கள், கடமை தவறிய போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறையினா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அடங்கிய அமா்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, சென்னை காவல் ஆணையா் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT