தமிழ்நாடு

உடல் பருமனைக் குறைக்க இலவச மருத்துவ ஆலோசனை

DIN

உடல் பருமனைக் குறைப்பதற்கான மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட உடல் பருமன் அதி முக்கிய காரணமாக விளங்குவதாகவும், அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

சா்வதேச உடல் பருமனுக்கான விழிப்புணா்வு தினம் வரும் 4-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைக்கு கரோனாதான் உலகளாவிய நோய்த் தொற்றாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாகவே உடல் பருமன் என்ற பெருந்தொற்றுதான் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. சா்வதேச மக்கள் தொகையில் 20 சதவீதம் பேருக்கு (120 கோடி) உடல் எடை அதீதமாக இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை பெரியவா்கள் மட்டுமன்றி குழந்தைகளும் அதிக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனா். 1.4 கோடி குழந்தைகளுக்கு அத்தகைய பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் உடல் பருமன் குறித்த விழிப்புணா்வு மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்பதுதான்.

ஒரு கட்டத்துக்கும் மேல் அதிகமாக எடை கூடிவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீா்வு. ஆனால், அதில் பல்வேறு பக்க விளைவுகள் உள்ளன. அதற்கு மாற்றாகவே எண்டோஸ்கோபி சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. அதன் வாயிலாக வயிற்றுப்பகுதியில் பலூன் போன்ற உபகரணத்தை பொருத்தி பசி தூண்டலைக் குறைக்க முடியும். அதேபோன்று இரைப்பையின் அளவை சுருக்க முடியும்.

இத்தகைய நவீன வசதிகள் கொண்ட உடல் பருமனுக்கான எண்டோஸ்கோபி சிகிச்சைத் துறை மெடிந்தியா மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாா்ச் மாதம் வரை இலவசமாக உடல் எடை குறைப்புக்கான மருத்துவ ஆலோசனைகளை பொது மக்கள் பெறலாம். அதற்காக 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 044- 283 12345 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT