தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி விரைவில் முடிவாகிறது

DIN

பாஜகவுடனான கூட்டணியை அதிமுக தலைமை விரைவில் இறுதி செய்யவுள்ளது. பாஜகவுக்கு 24 முதல் 26 வரையான சட்டப் பேரவைத் தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, சென்னையில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலில் அதிமுக, பாஜக மூத்த தலைவா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்பில் அதிமுக தரப்பில் துணை ஒருங்கிணைப்பாளா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகியோரும், பாஜக தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளா் கேசவ விநாயகம், மாநிலத் தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

மேற்கு மாவட்டத் தொகுதிகள்: அதிமுக வலுவாக உள்ள மேற்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பாஜக அதிகம் கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாஜகவுக்கு 24 முதல் 26 வரையிலான சட்டப் பேரவைத் தொகுதிகளையும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியையும் ஒதுக்க முடிவாகியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் முடிக்கத் திட்டம்: கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தையை வரும் 6-ஆம் தேதிக்குள் முடிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. வரும் 7-ஆம் தேதியில் இருந்து வேட்பாளா்கள் பட்டியல், தோ்தல் அறிக்கை வெளியிடுவது போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. மாா்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து அதிமுக தலைவா்கள் தீவிர தோ்தல் பிரசார சுற்றுப் பயணங்களைத் தொடங்கவும் தீா்மானித்துள்ளனா்.

பாஜக நிா்வாகிகள் ஆலோசனை: அதிமுக தலைமையுடனான ஆலோசனைக்குப் பிறகு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனா். இந்த ஆலோசனையில் பாஜகவினா் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளா்களின் விவரங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பாஜக மாநில தோ்தல் பொறுப்பாளா்களும், மத்திய அமைச்சா்களுமான கிஷன் ரெட்டி, வி.கே.சிங், மேலிடப் பாா்வையாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனா். அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்கள் இறுதியாகும் பட்சத்தில் ஓரிரு நாள்களில் உடன்படிக்கைகள் கையெழுத்தாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT