தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

3rd Mar 2021 04:08 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலின் எதிரே உள்ள புதிய குளமான தாமரைக் குளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காரம் என்ற மாசிலாமணி இவரது மகன் அருச்சன்கார் வயது 23.  இவர் பொறியியல் பட்டதாரி.  

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமண நிகழ்ச்சிக்காக வந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைக் குளத்தில் குளிக்கச் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாததால்  எதிர்பாராதவிதமாகக் குளத்திற்குள் தவறி விழுந்து இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நகர்காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : Srivilliputhur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT