தமிழ்நாடு

உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

3rd Mar 2021 06:32 PM

ADVERTISEMENT

 

உலக வன நாளை முன்னிட்டு மேகமலை வன உயிரின சரணாலயம் வண்ணாத்தி பாறை பிரிவில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயம் வண்ணாத்தி பாறை பிரிவில் உலக வன நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா புதன் கிழமை நடைபெற்றது. கூடலூர் வனச்சரகர் பி.அருண்குமார் தலையில், கம்பம் கிழக்கு வனச்சரகர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. கம்பம் மேற்கு வனச்சரகர் அன்பு அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் பலன் தரும் மரக்கன்றுகளை கால்நடை மருத்துவர் செல்வம் நட்டு வைத்துத் தொடங்கினார். கூடலூர், கம்பம் மேற்கு, கிழக்கு உள்ளிட்ட மேகமலை வன உயிரின சரணாலய பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் வனவர்கள், கார்டுகள், வாட்ச்சர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT