தமிழ்நாடு

திருப்பூரில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு

3rd Mar 2021 06:37 PM

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக திருப்பூரில் மாநகர காவல் துறை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம். 

இதன்படி திருப்பூரில் ரயில் நிலையம் முன்பாக மாநகர காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதில், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், உதவி ஆணையர்கள், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் காவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 500 பேர் பங்கேற்றனர். 

ADVERTISEMENT

இந்த கொடி அணிவகுப்பானது திருப்பூர் குமரன் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக காங்கயம் சாலை சிடிசி கார்னர் வரையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது. இதில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT