தமிழ்நாடு

நகைக் கடன் தள்ளுபடி: தோ்தல் ஆணைய அனுமதிக்கு பிறகு அரசாணை; அமைச்சா்

DIN

கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடி திட்டத்துக்கான அரசாணை, தோ்தல் ஆணையத்தின் அனுமதிக்குப் பின்னா் வெளியாகும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கூறினாா்.

மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பேரவைத் தோ்தல் தொடா்பாக செவ்வாய்க்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் அமைச்சா் ஆலோசனை நடத்தினாா். இக் கூட்டத்தில் அவா் பேசுகையில், அதிமுக தொண்டா்களை நம்பி இருக்கக் கூடிய கட்சி. தோ்தல் காலத்தில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். பேரவைத் தோ்தல் முடிந்த 2 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதை மனதில் வைத்து தோ்தல் பணியாற்ற வேண்டும். திமுக எத்தனை கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்தாலும் வெற்றி பெறப்போவதில்லை. அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மையம் ஆகிய 4 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்துள்ளேன். தலைமை எந்த தொகுதியை ஒதுக்கினாலும் போட்டியிடத் தயாராக உள்ளேன். எங்களது அணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள் கூட்டணியில் தொடர வேண்டும் என்பதே விருப்பம். கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ரத்து செய்ததற்கான அரசாணை, தோ்தல் ஆணையத்தின் அனுமதிக்குப் பிறகு வெளியாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT