தமிழ்நாடு

இப்போது மாற்றம் ஏற்படாவிட்டால் இனி எப்போதும் இல்லை: பொன்ராஜ்

3rd Mar 2021 03:25 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் இப்போது அரசியல் மாற்றம் ஏற்படாவிட்டால் இனி எப்போதும் ஏற்படாது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொன்ராஜ் கூறினார்.

அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்ட பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கினார் கட்சியின் தலைவர் கமல்.

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

ADVERTISEMENT

அப்போது பேசிய பொன்ராஜ், கலாமின் கனவை நனவாக்க யார் தயாராக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அப்துல் கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். 

தமிழகத்தை சீரமைப்போம் என்ற நோக்கத்தோடு கமல் அழைப்பை ஏற்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன். எனவே, அவருடன் இணைந்து இந்த தமிழகத்தை சீரமைப்போம். தற்போது ரூ.5.7 லட்சம் கோடி கடன் இருக்கும் தமிழகத்தின் நிலையை மாற்றுவோம். தமிழகத்தின் நிலையை மாற்றி, வருவாயை அதிகரிப்போம். வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் நிச்சயம் வெல்லும். தமிழகத்தில் இப்போது மாற்றம் ஏற்படாவிட்டால் இனி எப்போதும் ஏற்படாது என்று கூறினார்.

இன்று வரை கலாமின் பெயரிலான கட்சியைப் பதிவு செய்ய விடாமல் பாஜக தடுத்து வருகிறது என்றும் பொன்ராஜ் கூறியுள்ளார்.
 

Tags : Kamal ponraj
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT