தமிழ்நாடு

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு: ஸ்ரீவில்லிபுத்தூரில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு

3rd Mar 2021 03:33 PM

ADVERTISEMENT

 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் 93 சாதியினருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆனால் ஒரே சாதியினருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இது சமூக அநீதி ஆகும். எனவே இதனைக் கண்டித்து கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடைபெறும் என மறவர் மகாசபை மறவர் நலக் கூட்டமைப்பு தேவர் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது,

இதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு வகையில் தமிழக அரசைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் உள்ள மின் விளக்கு கம்பத்தில் இந்த கருப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்

மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளம் பகுதியிலும் முக்கிய இடங்களில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT