தமிழ்நாடு

அதிமுக-தேமுதிக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

DIN


சென்னை: அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் புதன்கிழமை அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது. 

சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெறப் போவதாகவும் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா்.

இந்நிலையில் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் பாமகவைப் போலவே தங்களுக்கும் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் தர வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியது. 12 முதல் 15 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிமுக - தேமுதிக கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்தது. 

இந்நிலையில், அதிமுக - தேமுதிக இடையே புதன்கிழமை நடைபெறும் 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

தேமுதிக தரப்பில் தமிழகத்தில் 5 மண்டலங்களில் 5 தொகுதிகள் என 25 தொகுதிகளின் பட்டியலை தேமுதிக கொடுத்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் குறைந்தது 3 தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. 

விருத்தாசலம், விருதுநகர், ராதாபுரம், மேட்டூர், மயிலாதுறை, பண்ருட்டி, பேராவூரணி, ஆம்பூர், சேந்தமங்கலம், சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, திட்டக்குடி, மதுரை மத்தியம், ஆலந்தூர், விருகம்பாக்கம், எழும்பூர், அம்பத்தூர், ரிஷிவந்தியம், ஈரோடு கிழக்கு, சூலூர் தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT