தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனை

3rd Mar 2021 04:25 AM

ADVERTISEMENT

புதுவை சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது .
 கூட்டத்தில் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி, எம்எல்ஏக்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், திருமுருகன், சந்திர பிரியங்கா, எம்பி கோகுலகிருஷ்ணன், முன்னாள் பேரவைத் தலைவர் சபாபதி, முன்னாள்அமைச்சர்கள் தியாகராஜன், பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தற்போது பாஜக - அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் என்.ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திப் போட்டியிடுவது, இதற்கேற்ப கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடலாம் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT