தமிழ்நாடு

சிஐசிஎஸ்இ : பிளஸ் 2, பத்தாம் வகுப்பு: பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

3rd Mar 2021 04:26 AM

ADVERTISEMENT

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐசிஎஸ்இ) நடத்தும் ஐஎஸ்சி (பிளஸ் 2), ஐசிஎஸ்இ (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
 ஏப்ரல் 8-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், மே 5-ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.
 நாடு முழுவதும் கரோனா பரவலால் நிகழ் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. சிஐசிஎஸ்இ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் சார்பிலும், இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆண்டுதோறும் சிஐசிஎஸ்இ சார்பில் ஐசிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படும் சூழலில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
 இதுகுறித்து சிஐசிஎஸ்இ தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெர்ரி ஆரதூன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி முடிவடைகின்றன. பிளஸ் 2 வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 16-ஆம் தேதி முடிவடைகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டு ஐஎஸ்சி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே கரோனா பரவல் நாட்டில் தொடங்கியதால், தேர்வுகள் நடத்தப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வும் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT