தமிழ்நாடு

நாளை திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு உறுதியாகிறது

DIN

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே புதன்கிழமை (மாா்ச் 3) தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட உள்ளது.

திமுக - காங்கிரஸ் இடையே பிப்ரவரி 25-இல் முதல் கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ராகுல்காந்தி தமிழகம் வந்திருந்து பிரசாரத்தில் ஈடுபட்டதன் காரணமாக அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற உள்ளது.

இதில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளாா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த எண்ணிக்கை அளவிலேயே இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியது. ஆனால், அதை திமுக ஏற்காததால் 30 தொகுதிகள் வரையேனும் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. திமுக தரப்பில் 22 தொகுதிகளில் இருந்து 25 தொகுதிகள் வரையே ஒதுக்க முன்வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT