தமிழ்நாடு

தேர்தலில் போட்டியிடவில்லையா உதயநிதி?: திமுக விளக்கம்

2nd Mar 2021 09:06 PM

ADVERTISEMENT

 

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து திமுக விளக்கமளித்துள்ளது.  

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டன.

அதன்படி திமுகவில் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அல்லது நெல்லையில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அதேசமயம் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மறுப்பும் பரவத் துவங்கியது.     

ADVERTISEMENT

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து திமுக விளக்கமளித்துள்ளது.  

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவைச் சேர்ந்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கே.என்.நேரு இருவரும் கூட்டாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது காங்கிரசுடனான தொகுதிப்பங்கீடு குறித்த கேள்விக்கு, ‘இன்னும் 2 அல்லது 3ம் கட்ட பேச்சுவார்த்தைகளில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும்; பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும்’ என்று தெரிவித்தனர்.

அதேசமயம் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்த கேள்விக்கு, ‘உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது’ என்று விளக்கமளித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT