தமிழ்நாடு

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு ஓரிரு நாள்களில் இறுதியாகும்: கே.எஸ். அழகிரி

2nd Mar 2021 06:35 PM

ADVERTISEMENT


திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாள்களில் இறுதி செய்யப்படும் என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ். அழகிரி கூறியது:

"கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படும். பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தாமதம் இல்லை. 

எங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைக் கேட்டுள்ளோம். அவர்களும் அதுகுறித்து கேட்டிருக்கிறார்கள். எங்களுக்கிடையே எந்த சிக்கலும் இல்லை.

ADVERTISEMENT

ஸ்டாலினும், ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்."
 

Tags : DMK alliance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT