தமிழ்நாடு

கடலூரில் ரூ.51.36 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

2nd Mar 2021 11:51 AM

ADVERTISEMENT

 

கடலூரில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.51.36 லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வட்டாட்சியர் கலாவதி தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் வி.குமார் கொண்ட குழுவினர் கடலூர் பெரியகங்கணாங்குப்பத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து வந்த காரை சோதனை நடத்திய போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.51.36 லட்சம் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதனைப் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனர். 
 

ADVERTISEMENT

Tags : Cuddalore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT