தமிழ்நாடு

சங்ககிரியில் 37 பேருக்கு அரசு சார்பில் விலையில்லா காது கேட்கும் கருவிகள்

DIN

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பலத்துறை மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி சங்ககிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்பலத்துறை சார்பில்  சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட் , அரிமா சங்கம் ஆகியோர் இணைந்து சங்ககிரியில் பிப்ரவரி 21ல் நடத்திய காதுகேளாமைக்கான சிறப்பு பரிசோதனை முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா காதொலி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சங்ககிரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஜி.ஜெயஸ்ரீ தலைமை வகித்து 37 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார். 

சங்ககிரி பப்ளிக்சேரிடபுள் டிரஸ்ட்  தலைவர் ஏ.ஆனந்தகுமார், செயலர் ஆர்.ராகவன், பொருளாளர் கணேஷ், நிர்வாகிகள் முருகேசன்,  ராமச்சந்திரன் உள்ளிட்ட  பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT