தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரிக்கு திக்விஜய் சிங் தலைமையில் தேர்வுக் குழு: காங்கிரஸ்

2nd Mar 2021 07:10 PM

ADVERTISEMENT


தமிழகம் மற்றும் புதுச்சேரி பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்சிஸ்கோ சர்தின்ஹா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி, புதுச்சேரி பேரவைக் குழுத் தலைவர் வி. நாராயணசாமி ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.

Tags : election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT