தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

2nd Mar 2021 07:51 PM

ADVERTISEMENT

 

சென்னை: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகாரளிக்க எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி பல்வேறு வகைகளில் பணம் மற்றும் பரிசுப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ADVERTISEMENT

இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகாரளிக்க எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,’ வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சலிலும், 9445394453 என்ற வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் பண விநியோகத்தினை கண்காணித்து தடுக்கும் பொருட்டு வருமான வரித்துறையின் உதவியையும் தேர்தல் ஆணையம் நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT