தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: மார்ச் 6, 7-இல் காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல்

2nd Mar 2021 12:55 PM

ADVERTISEMENT

 

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நேர்காணல் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெறவுள்ள  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5ம் தேதி ஆகும்.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

Tags : congress dmk election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT