தமிழ்நாடு

சென்னையில் 1,783 கரோனா நோயாளிகள்

2nd Mar 2021 12:35 PM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா பாதிப்பு காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,783-ஆக உள்ளது.

இதுவரை முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை தீவிரமாகக் கடைப்பிடித்தவர்கள் கூட தற்போது முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வருவதும், கரோனா பரவல் கட்டுப்பாடுகளை மக்கள் சுயமாக தளர்த்திக் கொண்ட நிலையில், சென்னையில் மெல்ல கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே சென்னைவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன், கட்டுப்பாடுகளை மீண்டும் கடைப்பிடிப்பதே, இரண்டாவது அலையை எதிர்கொள்வதிலிருந்து நம்மைக் காக்கும் என்று நம்பலாம்.

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நாளொன்றுக்கு 2,000-த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

மாநகராட்சியின் தொடர் மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை காரணமாக நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 500-க்கும் குறைவானவர்கள் கண்டறியப்பட்டனர். 

இந்நிலையில், நோய்த் தொற்று மேலும் குறைந்து நாளொன்றுக்கு 150-க்கும் குறைவானவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் சென்னையில் கரோனா உறுதி செய்யப்படுபவரின் எண்ணிக்கை 150-க்கும் அதிகமாக உள்ளது. நேற்று 171 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 35,721 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 லட்சத்து 29,783 பேர் குணமடைந்துள்ளனர்.  கரோனாவால் இதுவரை 4,155 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அந்த எண்ணிக்கை ஜனவரியில் 1,500 பேராகக் குறைந்தது. எனினும், சில வாரங்களுக்கு முன்பு வரை 1500 என்ற அளவில் இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்று 1780 என்ற அளவுக்கு சப்தமில்லாமல் உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 210 பேரும், அம்பத்தூரில் 164 பேரும் அண்ணாநகரில் 167 பேரும் தேனாம்பேட்டையில் 175 பேரும், சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலவாரியாக நிலவரம்..
 

Tags : coronavirus chennai update vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT