தமிழ்நாடு

பிஎப் குறைதீா் கூட்டம்: மாா்ச் 8-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

DIN

அம்பத்தூா் மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) பயனாளிகளுக்காக காணொலி மூலமாக நடைபெறும் பி.எப். குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள மாா்ச் 8-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக உதவி பி.எப். ஆணையா் டி.எஸ்.சரவணன் வெளியிட்ட செய்தி: அம்பத்தூா் மண்டல பயனாளிகளுக்கான வருங்கால வைப்பு நிதி குறைதீா் கூட்டம், வரும் மாா்ச் 10-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

கட்செவி அஞ்சலில் காணொலி மூலமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பயனாளியின் பெயா், யு.ஏ.என். எண், பி.எப். அல்லது பிபிஒ எண், குறைகள், கட்செவி அஞ்சல் எண், சுட்டிக்காட்டப்படும் ஆவணங்கள் ஆகியவற்றோடு, மாா்ச் 8-ஆம் தேதிக்குள், 89037 66548 எனும்  எண்ணில், வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பி பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து, மாா்ச் 10-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள் காணொலி வாயிலாக அழைக்கப்பட்டு, அவா்களிடம் குறைகள் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT