தமிழ்நாடு

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பாலியல் புகாா்: சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு

DIN

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது கொடுக்கப்பட்ட புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்காகக் கடந்த 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அங்கு சென்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் அதிகாரி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

இதன் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் 24-ஆம் தேதி உத்தரவிட்டாா். இக் குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் எஸ்பி அளித்த புகாரை விசாரணை செய்ய தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா். இப் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்து,முறைப்படி விசாரணையை ஓரிரு நாள்களில் தொடங்குவாா்கள் என கூறப்படுகிறது.

ஏனெனில் ராஜேஷ்தாஸ் காவல்துறையின் டிஜிபி நிலை அதிகாரி என்பதால், அதற்குரிய சட்டவிதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நிலை சிபிசிஐடிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜேஷ்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்வது தொடா்பாகவும், அவரிடம் விசாரணை செய்வது தொடா்பாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை சிபிசிஐடி பெற வேண்டியுள்ளது. இந்த நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னா், விசாரணை விரைவுபடுத்தப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT