தமிழ்நாடு

தேமுதிக தனித்துப் போட்டி? சுதிஷ் சூசகம்

1st Mar 2021 08:18 PM

ADVERTISEMENT


சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் தான் முதல்வர் என தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பேரவைத் தேர்தல் தொடர்பான கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக மற்றும் திமுக தீவிரப்படுத்தி வருகின்றன. அதிமுக, பாமக இடையிலான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில் அதிமுக - பாஜக, அதிமுக - தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

இதனிடையே, தேமுதிக கேட்கும் எண்ணிக்கைகளை வழங்க அதிமுக மறுப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்பதைக் குறிக்கும் வகையிலான புகைப்படத்தை சுதிஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : ADMK Alliance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT