தமிழ்நாடு

திமுகவுடன் தொகுதி பங்கீடுப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது: திருமாவளவன்

1st Mar 2021 09:04 PM

ADVERTISEMENT

 

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ல் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று திமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும், எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து என்ற தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT