தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் 

DIN

அம்மாபேட்டை அருகேயுள்ள குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம், திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள காடப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சதாசிவம் (72). இவர், இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், தொடர்ந்து, கேரள மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி அம்மாள் (70). தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இவர்கள் இருவருக்கும் 60 வயதுக்கு மேலாவதால் திங்கள்கிழமை குருவரெட்டியூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று  தடுப்பூசியினை போட்டுக் கொண்டனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறுகையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கிராமப்புற பகுதிகளில் கரோனா பாதிப்பு, தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

சர்வதேச அளவில் மீண்டும் பரவிவரும் கரோனா தொற்றின்  தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களைப் பாதுகாக்க அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உதாசீனப்படுத்தாமல் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

குருவரெட்டியூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி, மருத்துவர்கள் சண்முகசுந்தரம், திவாகர், அங்குராஜ் சங்கரலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமேஷ், அம்மாபேட்டை சுகாதார ஆய்வாளர் வள்ளிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT