தமிழ்நாடு

பர்கூரில் சாதி சான்றிதழ் கேட்டு கறுப்புக்கொடி போராட்டம்

DIN

அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள், சாதி சான்றிதழ் வழங்கக்கோரி வீடுகளில் திங்கள்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் மலையனூர், தாமரைக்கரை, மின்தாங்கி, கல்வாரை, கடை ஈரட்டி, கோயில் நத்தம், தொல்லி உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் சுமார் 1500 குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியல் பழங்குடியினப் பிரிவில் மலையாளி இன சாதி சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், மலைப் பகுதியில் வசிக்கும் தங்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக இம்மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சாதிச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டி மலைக் கிராமங்களில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்திலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT