தமிழ்நாடு

8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்

DIN

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு மைய இயக்குநா் நா. புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் 4 நாள்களுக்கு (மாா்ச் 1 முதல் மாா்ச் 4 வரை) வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை உயரும்: தமிழகத்தின் மதுரை, திருச்சி, தருமபுரி, நாமக்கல், கரூா், சேலம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 1, 2) ஆகிய இரண்டு நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT