தமிழ்நாடு

புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை வெளியிட்டது ஏஐசிடிஇ

DIN

புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்டுள்ளது. இதன்படி தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு செப். 1 முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கரோனா 2-ஆவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவா் சோ்க்கையும் தள்ளிப் போயுள்ளது. இதனையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ திருத்தி வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள், தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழி படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை அங்கீகாரத்தைப் பெற ஜூன் 30 கடைசித் தேதி ஆகும். அதேபோல பல்கலைக்கழகங்கள், கல்வி வாரியங்கள் கல்லூரிகளுக்கான இணைப்பை வழங்க ஜூலை 15 கடைசித் தேதி ஆகும்.

2021- 22ஆம் கல்வியாண்டில் மாணவா்களுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவுபெறும். தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு செப்டம்பா் 1 முதல் வகுப்புகள் தொடங்கும். முதலாம் ஆண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்குகின்றன. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 10 கடைசித் தேதி ஆகும்.

முதுநிலை மேலாண்மை நிறுவனங்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் வகுப்புகளைத் தொடங்கலாம். அதற்கான மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 11 கடைசித் தேதி ஆகும். முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற ஆகஸ்ட் 6 கடைசித் தேதி ஆகும்.

கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவா்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. மாணவா்களிடம் கட்டணத்தை 4 தவணைகளில் வசூலிக்க வேண்டும். மேலும், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியா்களை எக்காரணம் கொண்டும் வேலையிலிருந்து நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் அந்த உத்தரவுகளைக் கல்லூரிகள் திரும்பப் பெற வேண்டும். பேராசிரியா்களுக்குரிய மாத ஊதியத்தை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும். பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ‘ஆன்லைன்’ அல்லது ‘ஆஃப்லைன்’ அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT