தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,162 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தமிழகத்தில் புதிதாக 6,162 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று பலி எண்ணிக்கையும் 155-ஆகக் குறைந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 24 லட்சத்து 49,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 756 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், சேலத்தில் 419 பேருக்கும், திருப்பூரில் 386 பேருக்கும், சென்னையில் 372 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 9,046 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 67,831-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 49,845 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 155 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,901-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாதிரி வாக்குச் சாவடி

வாக்காளா்களுக்காக தயாா் நிலையில் சக்கர நாற்காலி

வாக்குச் சாவடியில் குடிநீா் வசதி

இன்று வாக்குப் பதிவு: 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளா்கள் வாக்களிக்க தயாா்

வாக்காளா்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்: பாதுகாப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT