தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி

25th Jun 2021 03:45 PM

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 
அதிமுக ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் மணிகண்டன். இவா் மீது துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவா் கடந்த 20-ஆம் தேதி பெங்களூரில் கைது செய்யப்பட்டாா். 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சா் மணிகண்டன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே இந்த மனு நீதிபதி செல்வகுமாா் முன் விசாரணைக்கு வந்தபோது மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். 
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Tags : ADMK former minister Manikandan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT