தமிழ்நாடு

தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர்கள் தேர்வு

24th Jun 2021 04:58 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர்:  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியனின் பதவிக்காலம் அக்டோபர் 3} ஆம் தேதி முடிவடைகிறது.

இதையொட்டி இப்பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான ஐவர் குழுவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவையின் சார்பில் ஒருவரும், ஆட்சிக் குழுவின் சார்பில் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  

ADVERTISEMENT

இதன்படி, பல்கலைக்கழகப் பேரவை சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் (பணிநிறைவு) வ. ஜெயதேவன், ஆட்சிக்குழு சார்பில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதி மேலாண்மையியல் துறைத் தலைவர் மு. செல்வம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தி. பத்மநாபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT