தமிழ்நாடு

சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே

24th Jun 2021 12:44 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் நிலையில், பெண்கள் மற்றும் 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், முன்பு இருந்ததைப் போலவே ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே.. இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை

ADVERTISEMENT

அதன்படி, புறநகர் ரயிலில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும்  ஆண் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுவரை அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயிலில் பயணித்து வந்தனர். இந்த நிலையில், நாளை முதல் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT