தமிழ்நாடு

கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கு சிறப்பு மையங்கள்: ஸ்டாலின்

24th Jun 2021 10:53 AM

ADVERTISEMENT


சென்னை: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து, தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.

இதையும் படிக்கலாமே.. இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை

ADVERTISEMENT

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை உரையாற்றினாா். அதற்கு முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் குறுக்கிட்டுப் பேசினா். இந்த நிலையில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றுகிறாா். அப்போது பல முக்கிய அறிவிப்புகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

 

அதில், தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.

தமிழக்ததில் உள்ள பழமையான திருக்கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் பதிலுரை - முழு விவரம்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.

சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

தமிழகத்தின் மீத்தேன், நீயூட்ரினோ திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

இதையும் படிக்கலாமே.. சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே

சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களின் போது எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துகள் மீது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பதில் அளித்து வருகிறார்.

அவரது உரைக்குப் பிறகு, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். அதன்பின், பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன் முன்மொழிவாா். அந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT