தமிழ்நாடு

சசிகலாவிடம் பேசிய மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

24th Jun 2021 11:50 AM

ADVERTISEMENT

சசிகலாவிடம் பேசிய மேலும் 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுபாய் மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், 

ஏ. ராமகிருஷ்ணன், ஆர், சரவணன், ஆர். சண்முகப்பிரியா, ராஜகோபால், டி. சுந்தர்ரான் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்  பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தற்போது அதிமுகவினரிடம் பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சசிகலாவுக்கும் அதிமுகவும் எந்த சம்மந்தமும் இல்லை என்றே ஓபிஎஸ், இபிஎஸ் கூறி வருகின்றனர்.

மாவட்டந்தோறும்  அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருவதும் தொடர்கிறது. 

Tags : ADMK sasikala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT