தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: வெளிநாடு செல்பவர்களுக்காக தடுப்பூசி முகாம் வேண்டும்

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளரும், நகர மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம்.சமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

கரோனாவை எதிர்கொள்ள, உயிர் பிழைக்க ஒரே மருந்து தடுப்பூசி மட்டும்தான். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும்தான், இந்தியா முழுக்க மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது சில வெளிநாடுகளில் கரோனா தொற்று குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகிறது. மேலும் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்றவர்கள், தடுப்பூசிகளை 2 தவணையையும் போட்டுக் கொண்டவர்கள் மீண்டும் வேலைக்கு வந்துவிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கி விடும் நிலை ஏற்பட்டால், வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், பொதக்குடி, மரக்கடை, அத்திக்கடை, அடியக்க மங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள், சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், செளதி அரேபியா, லண்டன், புரூனே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில்தான், அரசுப் பணி, தனியார் பணி மற்றும் ஒப்பந்தப் பணிகளில் பணியாற்றுகிறார்கள்.

மேலும், வெளிநாடுகளில் படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கரோனா தொற்று நோயால், தங்களது சொந்த நாட்டிற்கு, ஊருக்கு வந்துள்ளனர். இவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டுமானால், கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் இன்னும் 3 வாரங்களில் வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் செல்லலாம் என்ற அறிவிப்பு வரும் நிலை ஏற்படும்போது, அந்த நேரத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, இரண்டாவது தடுப்பூசிக்காக மேலும் 18 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் உடனே வெளிநாட்டிற்கு செல்ல இருப்பவர்களுக்காக மட்டும் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக, மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் முகாம் நடத்தப்பட வேண்டும். இந்த முகாமால், ஏராளமானவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT