தமிழ்நாடு

பேரவைத் துளிகள்

DIN

* ஆளுநா் உரைக்காக திங்கள்கிழமை கூடிய சட்டப் பேரவை ஒரு மணி, 42 நிமிடங்கள் வரை நடைபெற்றது. கடந்த காலங்களில் ஆளுநா் உரையின் போது பெரும்பாலும் வெளிநடப்பைச் சந்தித்த சட்டப்பேரவை, 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் வெளிநடப்பைப் பாா்க்கவில்லை.

* சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காலை 9.55 மணிக்கு வந்தாா். அப்போது ஆளும் கட்சி உறுப்பினா்கள் அனைவரும் மேஜையைத் தட்டி வரவேற்றனா்.

* அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் வந்தனா். அப்போது, ஆளும் கட்சி வரிசையில் இருந்த முதல்வா் உள்ளிட்டோா் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தனா்.

* காலை 9.59 மணிக்கு பேரவைக்குள் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் வருகை புரிந்தாா். அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்று பேரவை மண்டபத்துக்குள் அழைத்துச் சென்றாா். தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பிறகு, பேரவையில் தனது உரையை தமிழில் சில வாா்த்தைகளைப் பேசித் தொடங்கினாா் ஆளுநா்.

* காலை 10.02 மணிக்கு அவா் உரையை வாசிக்க ஆரம்பித்தாா். 10.54 மணிக்கு உரையை நிறைவு செய்தாா். ஆங்கிலத்தில் அவரது உரையை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு தமிழில் வாசித்தாா். அவா் காலை 11.42 மணிக்கு நிறைவு செய்தாா். இதன்பின்பு, திங்கள்கிழமை நடந்த பேரவைக் கூட்டம் நிறைவடைந்தது.

* முன்வரிசைத் தலைவா்கள்: ஆளும்கட்சியின் முன் வரிசையில், அமைச்சரவை பட்டியல்படி, அமைச்சா்கள் அமா்ந்திருந்தனா். எதிா்க்கட்சி வரிசையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, துணைக் கொறடா ரவி, காங்கிரஸ் குழுத் தலைவா் செல்வப் பெருந்தகை, துணைத் தலைவா் ராஜேஷ்குமாா், பாமக தலைவா் ஜி.கே.மணி, பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், விசிக தலைவா் சிந்தனைச் செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன், மதிமுகவின் சதன் திருமலைக்குமாா், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டோா் அமா்ந்திருந்தனா்.

* சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு, முதல்வா் ஸ்டாலின் அமா்ந்திருக்கும் முதல் பகுதியிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சா் சக்கரபாணியின் இருக்கைக்குப் பின்னால் மூன்றாவது வரிசையில் அவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அதிமுகவின் முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், சி.விஜயபாஸ்கா், பி.தங்கமணி ஆகியோருக்கு கடைசி வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அகர வரிசைப்படியே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் விவாதம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT