தமிழ்நாடு

மின்சார வாரியத்தின் கடன் ரூ. 1.59 லட்சம் கோடி: அமைச்சர் செந்தில் பாலாஜி

22nd Jun 2021 02:17 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 1.59 லட்சம் கோடி கடனில் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாள் கூட்டமான இன்று மின்சாரத்துறை அமைச்சர் பேசுகையில்,

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் ரூ. 1.59 லட்சம் கோடியாக உள்ளது. இந்த கடனுக்காக ஆண்டுதோறும் வட்டி மட்டும் ரூ. 13 ஆயிரம் கோடி கட்டப்பட்டு வந்துள்ளனர்.

திமுக அரசு பொறுப்பேற்றதும் ஆண்டின் வட்டி தொகையில் ரூ. 2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

Tags : EB Debt Minister Senthil balaji
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT