தமிழ்நாடு

15 எண்ணெய்க்கிணறுகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

22nd Jun 2021 01:34 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 15 எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டிருந்த ஓஎன்ஜிசியின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசியதற்கு பதில் அளித்துப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு அனுமதியளிக்கப்படமாட்டாது.

அதுபோல அரியலூரில் 10, கடலூரில் 5 இடங்களில் எண்ணெய்க்கிணறுகள் அமைக்க மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி அனுமதி கேட்டிருந்தது. இந்த 15 இடங்களில் எண்ணெய்க்கிணறுகள் அமைக்கக்கோரிய ஓஎன்ஜிசியின் விண்ணப்பங்கள் அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், சிமெண்ட் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த, கடந்த 14ம் தேதி உற்பத்தியாளர்களை அழைத்து பேசினோம். அதன்படி சிமெண்ட் விலை குறைக்கப்பட்டு தற்போது ரூ.460 ஆக உள்ளது. மேலும் குறைக்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

Tags : tn govt tnassembly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT